தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனிமேல் தனிமைப்படுத்துதல் இல்லை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனிமேல் தனிமைப்படுத்துதல் இல்லை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தளர்வு அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்ததால் மக்களிடையே கொரோனா பீதி அதிகரித்தது. அதனால் மக்களை இதிலிருந்து காக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. ஆரம்ப கட்டத்தில் கொரோனாவில் இருந்து தமிழகம் மீளுமா என கேள்வி எழுந்து வந்த நிலையில் தற்போது விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என நம்பிக்கை எழும் அளவுக்கு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியது.

தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனிமேல் தனிமைப்படுத்துதல் இல்லை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஒரு வழியாக 5 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பேருந்துகள், மால்கள், பார்க் என அனைத்தும் திறக்கப்பட்டன. பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு இன்றைய தினம், புத்துணர்வு அளிக்கும் தினமாக அமைந்தது. விரைவில் தற்போது இருக்கும் சூழலும் மாறி, மார்ச் மாதத்திற்கு முன்னர் இருந்த தமிழகம் போன்ற இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனிமேல் தனிமைப்படுத்துதல் இல்லை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 21.5% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைபடுத்தப்படுவார்கள் என்றும் இல்லையெனில் தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் தனிமைப்படுத்தல் இல்லை என்றும் கூறினார். மேலும், தளர்வு கொடுக்கப்பட்டதால் கொரோனா இல்லை என நினைக்க வேண்டாம் என்றும் 3 மாதங்களுக்கு தேவையில்லாத பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.