தமிழகத்தில் ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிப்பு

 

தமிழகத்தில் ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிப்பு

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3023-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1379 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

Lockdown

நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருந்தாலும் பலர் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து தேவையின்றி ஊர் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த விஷயத்தில் அதிகம் ஈடுபடுகிறார்கள். அப்படி ஊர் சுற்றுபவர்களை பிடித்து போலீசார் தகுந்த பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மூலமாக ரூ.4.01 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மதிக்காமல் வாகனங்களில் ஊர் சுற்றிய 4,07,895 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக இதுவரை 3,85,436 வழக்குகள் பதிவாகியுள்ளன.