“தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் அதிகளவு RT-PCR சோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் நேற்று கூறியுள்ளது . மே 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி காபந்து முதல்வராக இருக்கும் போது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு 230 மெ.டன்; தற்போது ஒருநாள் கையிருப்பு 650 மெ.டன் என்றும் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று கூறியிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அத்துடன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்., உதயகுமார், செல்லூர் ராஜு, பாஜக எம்.எல்.ஏ.க்களே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

“தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். கிராமப்புறங்களில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.