தமிழகத்தில் ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்படுமா? முதல்வர் இன்று அறிவிப்பு!?

 

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்படுமா? முதல்வர் இன்று அறிவிப்பு!?

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 ஆம்  தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் வரும் மே 3ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா  தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தேவையில்லாமல் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

tt

இருப்பினும் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் பொருட்டு இன்று நிபந்தனைகளுடன் சில தளர்வுகள்   இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களுக்கு தளர்வுகள் பொருந்தாது. ஏப்ரல் 20-க்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

tt

தமிழகத்தை பொறுத்தவரையில் எந்தெந்த புதிய தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதைப் பற்றி தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கும். இதற்காக மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது.அந்தக் குழு அதன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தெரிவிக்க உள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று  முடிவு எடுக்க உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.