தமிழகத்தில் உதயமாகிறது இரண்டு புதிய மாநகராட்சிகள்

 

தமிழகத்தில் உதயமாகிறது இரண்டு புதிய மாநகராட்சிகள்

ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.

சென்னை: ஓசூர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு இன்று தாக்கலாகிறது.

ஏற்கனவே சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு என 10 மாநகராட்சிகள் இருந்தது. அதன் பிறகு, 2013-ஆம் ஆண்டு தஞ்சையும், 2014-ஆம் ஆண்டு திண்டுக்கல்லும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஒசூர் மற்றும் நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை  எடுக்கப்படும் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். அதன்படி, தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் ஓசூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடையும் நிலையில், இதற்கான சட்டமுன் வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்கிறார்.