தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

 

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்  தெரியுமா?

வெப்பச்சலனம் காரணமாக நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது.

வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

வெப்பச்சலனம் காரணமாக நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் , விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

rain

மேலும் புதுக்கோட்டை , ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும்,  உள்மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.