தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகம்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகம்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முடியும் நேரத்தில் தமிழகத்தில் வெளியில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது… ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை நெருங்கி வாட்டி வதைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுகளை விட அதிக பட்ச வெப்பம் பதிவாகிறது. இதற்கு காற்று மாசு, வாகனங்கள் அதிகரிப்பு, காடுகள், மரங்கள் அழிப்பு, கான்கிரீட் காடுகளாக மாற்றம் என்று ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

தமிழகத்தில் இந்த ஆண்டும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முடியும் நேரத்தில் தமிழகத்தில் வெளியில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது… ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை நெருங்கி வாட்டி வதைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுகளை விட அதிக பட்ச வெப்பம் பதிவாகிறது. இதற்கு காற்று மாசு, வாகனங்கள் அதிகரிப்பு, காடுகள், மரங்கள் அழிப்பு, கான்கிரீட் காடுகளாக மாற்றம் என்று ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

hot-sun

இந்த ஆண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரக்கைவிடுத்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், அருணாசலப்பிரதேசத்தில் இயல்பைவிட ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 0.37 முதல் 0.41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது. முடிந்த வரை வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் போதுமான அளவு தண்ணீர் அருந்தும்படியும் தெரிவித்துள்ளனர்.