தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம்: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

 

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம்: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக,  நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை: தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக,  நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் காலூன்றி வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத துடிப்பு, ஸ்டைல் என மக்கள் மனதில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இந்தியா டுடே இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘தமிழத்தை வழிநடத்தத் தலைமைக்கு ஏற்பட்டுள்ள பஞ்சத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களிடம் எல்லாவிதமான திறமைகள் இருக்கின்றன.  அதனை ஒருங்கிணைப்பது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார். 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்,’மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட கோயில் பாரம்பரிய நடைமுறைகளில், நீதிமன்றம் தலையிடக் கூடாது.கோயில் பாரம்பரியங்கள் எப்போதும் போல் கடைப்பிடிக்க வேண்டும் ‘ எனவும் கருத்து கூறியுள்ளார். 

மீடூ விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ரஜினி, ‘பெண்கள் இதனை தவறான விதத்தில் பயன்படுத்தக்கூடாது’  என்று கோரிக்கை விடுத்துள்ளார்.