தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வேண்டும்! – பா.ஜ.க முன்னாள் எம்.பி எழுதிய கடிதத்தால் சர்ச்சை

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வேண்டும்! – பா.ஜ.க முன்னாள் எம்.பி எழுதிய கடிதத்தால் சர்ச்சை

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி ஆளுநர் கட்டுப்பாட்டில் தமிழகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பர் நரசிம்மன். கிருஷ்ணகிரி தொகுதியின் முன்னாள் பா.ஜ.க எம்.பி. இவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 
அதில், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை. கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில் தேர்தலை சந்திக்க அவர்கள் தயாராக இல்லை. கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒத்திவைப்பதே சரியாக இருக்கும். கொரோனா பாதிப்பு மனநிலை மாறி மக்கள் தேர்தலை சந்திக்கத் தயாராகும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

narasimman

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஆளும் கட்சி போதுமான கவனம் செலுத்தி செயல்படவில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஊரடங்கை அமல்படுத்திவிட்டு காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்குக் கூட சரியான ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தல் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி அமோ வெற்றி பெற்றும் என்ற கருத்து உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்துவிட்டு அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க-வினர் பேச ஆரம்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.