தமிழகத்தில் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம்! எடப்பாடியின் பரிசுத் தொகை எப்போ கிடைக்கும்?

 

தமிழகத்தில் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம்! எடப்பாடியின் பரிசுத் தொகை எப்போ கிடைக்கும்?

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டு பயனாளர்களுக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டு பயனாளர்களுக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவற்றுடன் ரூ.100 ரொக்கமும் சேர்த்து வழங்கினார்.  கடந்த ஆண்டு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத்தை சேர்த்து வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார்.

edapadi

அதே போல், இந்த வருடமும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். 
பொங்கல் தொகுப்பாக 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்பு துண்டு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படுவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினால் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

pongal

 
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்தப் பரிசுப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த வருடம் விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முன் கூட்டியே இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.  டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் இந்த பரிசுப் பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகிறது.  கரும்புகள் டிசம்பர் மாதத்தின் இறுதியில் தான் அதிகளவில் கிடைக்கும் என்பதால், தற்போது இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

public

அதே சமயம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை தனியாகவும், ரொக்க பணம் ரூ.1000 தனியாகவும் கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எப்படியிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே ரூ.1000 ரொக்கவும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.