தமிழகத்தில் அதிகரிக்கும் நீட் தேர்வு விண்ணப்பங்கள்… இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பிப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாகிவிட்டது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.க அறிவித்தது. நான்கு ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு மட்டுமே வருகிறது… ஆனால், விலக்கு மட்டும் வரவில்லை. இதனால், நீட் தேர்வுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்ட மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

NEET exam

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2018ம் ஆண்டு 1.14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 1.23 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அடுத்த ஆண்டுக்கான தேர்வுக்கு இதுவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கூடுதல் மாணவர்கள் விண்ணப்பித்துவிட்டார்கள் என்று சொத்தை காரணத்தைக் கூறி தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்காமல் தமிழகத்திலேயே, அந்தந்த ஊர் அருகிலேயே மையங்களையாவது ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.