தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல்! எவை இயங்கும்? எவை இயங்காது?

 

தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல்! எவை இயங்கும்? எவை இயங்காது?

ஊரடங்கில் தளர்வு அளிப்பது பற்றி முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை இன்று கூடியது.
ஊரடங்கு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாதம் கடந்த நிலையில் சென்னையில் கொரோனா தற்போதுதான் தன்னுடைய கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், உண்மையில் ஆய்வுகள் அதிகமாக நடக்கும்போதுதான் பாதிப்பு உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.இந்த நிலையில் ஊரடங்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகளை அளிக்க பரிந்துரைத்துள்ளது.

lockdown-tamilnadu-789

இந்நிலையில் இன்றையய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், “சென்னை தவிர பிற பகுதிகளில் ஊரக பேரூராட்சிப் பகுதிகளில் அனைத்துத் தொழிற்சாலைகளும் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி இல்லை. சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டகள் மற்றும் ரிசார்ட்டுகள் போன்றவை செயல்பட தடை. இறுதி ஊர்வலகங்களில் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது.

அனைத்துவகையான சமய, சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு விழாக்களுக்கு தடை நீடிக்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட தடை. சென்னையில் 10% ஊழியர்களுடன் ஏற்றுமனி நிறுவனங்கள் இயக்க அனுமதி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவை இயங்க தடை.மாநிலங்களுக்கிடையேயான பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. மதுகடைகள் இயங்க தடை

corona

மின்னணு வன்பொருள் உற்பத்தி,  50  சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புரங்களில் உள்ள ஒருங்கிணைந்த நுhற்பாலைகள் (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்)  50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நகர்புரங்களில் கட்டுமானப் பணிகள்: பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால்  மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும்  மாவட்ட  ஆட்சியரிடம்  உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

lockdown

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை. மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி  விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புரங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள்,  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.  மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம். நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து,  அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட  மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.