தமிழகத்திற்கு ஆளுநர் சாபக்கேடு: வைகோ விமர்சனம்

 

தமிழகத்திற்கு ஆளுநர் சாபக்கேடு: வைகோ விமர்சனம்

தமிழகத்திற்கு ஆளுநரும், நாட்டிற்கு மோடியும் ஒரு சாபக்கேடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்

விருதுநகர்: தமிழகத்திற்கு ஆளுநரும், நாட்டிற்கு மோடியும் ஒரு சாபக்கேடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டுக்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஒரு சாபக்கேடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் அத்துமீறி புரோக்கராக செயல்படுகிறார். 3 மாணவிகளை எரித்து கொன்றவர்களை விடுவிக்கும் ஆளுநர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அப்பாவி தமிழர்களை விடுவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.