தமிழகத்தின் 9 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.9000 ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்! 

 

தமிழகத்தின் 9 ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ.9000 ஒதுக்கிய நிர்மலா சீதாராமன்! 

மத்திய பட்ஜெட் மிக நீண்டதாக இருந்தது… கலர் கலராக ரீல் சுற்றினார் நிர்மலா சீதாராமன் என்று பலரும் புலம்பி வருகின்றனர். தற்போது ரயில்வே துறையில் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து, ரயில்வே அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய பாதை அமைக்கும் 9 திட்டங்களுக்கு தலா ரூ.1000த்தை நிர்மலா சீதாராமன் ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட் மிக நீண்டதாக இருந்தது… கலர் கலராக ரீல் சுற்றினார் நிர்மலா சீதாராமன் என்று பலரும் புலம்பி வருகின்றனர். தற்போது ரயில்வே துறையில் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4057 கோடி மட்டுமே கிடைக்கும். இந்த பணத்தை வைத்துக்கொண்டு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. 

nirmala-sitharaman-budget-2020

தமிழகத்தில் திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை, திண்டிவனம் – நகரி, அத்திப்பட்டு – புத்தூர், ஈரோடு – பழனி, சென்னை – கடலூர்- மாமல்லபுரம், மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி, கூடுவாஞ்சேரி – இருங்காட்டுக்கோட்டை, மொரப்பூர் – தர்மபுரி, ராமேஸ்வரம் – தனுஷ்கோடி, சத்தியமங்கலம் – மைசூரு ஆகிய திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 9000ம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “இந்த திட்டங்கள் எல்லாம் பட்ஜெட்டில் அறவிக்கப்பட்டவைதான். இந்த ஒன்பது திட்டங்களுக்கும் ரூ.11,628 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இந்த திட்டங்களுக்கு ரூ.1000ம் ஒதுக்கியுள்ளார்கள். இந்த திட்டங்களுக்கு மூடு விழாவை நடத்த இந்த 1000ம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

railway

இந்த ஆண்டு ஆந்திராவில் புதிய ரயில் பாதை அமைக்க 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது தமிழகத்துக்கு வெறும் 2.7 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ஒதுக்குவதாகக் கூறிவிட்டு 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய புதிய திட்டம் பாதியாகக் குறைகிறது. அடுத்த 6 ஆண்டுகளில் ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.13,60,000 கோடி செலவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதில் இந்த ஆண்டு மட்டும்  1,15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை” என்றனர்.