தமிழகத்தின் வறட்சியை போக்கவே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது- உளறிதள்ளும் செல்லூர் ராஜூ

 

தமிழகத்தின் வறட்சியை போக்கவே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது- உளறிதள்ளும் செல்லூர் ராஜூ

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கிவைத்தார். 

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கிவைத்தார். 

அதன்பின் விழாவில் பேசிய அவர், “தமிழகத்தின் வறட்சியை போக்கவே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசிலுள்ள எந்த துறையிலும் குறை சொல்லவே முடியாத அளவிற்கு பணியாற்றி வருகிறோம். ஒழுக்கத்திற்கு நானே சிறந்த உதாரணம். பள்ளிப்பருவத்தின்போது விளையாட்டுகளில் பங்கேற்றதால் ஒழுக்கமாக உள்ளேன். 

நியாய விலை கடைகளிலிருந்து அரிசி கடத்தப்பட்டு வந்தது தடுக்கப்பட்டது , ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்டு அனைவரின் செல்போன்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி முறைகேடுகள் தடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 50 லட்சம் லேப்டாப் மாணவ , மாணவியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது

ஏழை, எளிய பெண்களுக்கு ஒரு பவுன் தாலிக்கு தங்கம் கொடுத்து வருகின்றோம். 1 கோடியே 63 லட்சம் குடும்பங்களுக்கு மிக்ஸி , கிரைண்டர் , ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளத. அதற்காக 6533 கோடி நிதி செலவு செய்யப்பட்டுள்ளது

v

இன்று உள்ளாட்சி தேர்தலில் அதிகமான பெண்கள் தேர்ச்சி பெற்றதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியதுதான். மதுரையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு இராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. எங்களுடைய தலைவர்கள் யாரும் யாருடைய சொத்துகளையும் அபகரிக்கவில்லை. 

வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காத வகையில் கரையோரங்களில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தடுப்பு சுவர் அமைத்து கழிவுநீர் சுத்திகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மிகத் தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது” எனக்கூறினார்.