தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார்கள்: விவசாயிகளை சாடும் பொன்னார்

 

தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார்கள்: விவசாயிகளை சாடும் பொன்னார்

தமிழகத்தின் மானத்தை வாங்கும் வகையில் மிகக் கொச்சையான முறையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் நடந்து கொள்கிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்

கோவை: தமிழகத்தின் மானத்தை வாங்கும் வகையில் மிகக் கொச்சையான முறையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் நடந்து கொள்கிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த இரு தினங்களாக போராட்டம் நடைபெற்றது.

டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் ஜந்தர் மந்தர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்றைய பேரணியின் போது, அரைநிர்வாணமாக மண்டைஓடு, எலும்புகளுடன் தமிழக விவசாயிகள் ஊர்வலமாகச் சென்றனர்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தலைநகரத்தில் மற்ற மாநில விவசாயிகள் மத்தியில், தமிழகத்தின் மானத்தை வாங்கும் வகையில் மிகக் கொச்சையான முறையில் இங்கிருந்து சென்ற விவசாயிகள் நடந்து கொண்டுள்ளனர். இது மன்னிக்க முடியாத குற்றம். தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்கள். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு இங்கு இருக்கும் சில கட்சிகள் அவர்களுக்குப் பண உதவி அளித்து வருகின்றன என்றார்.