தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஜன.20 வரையில் சிறப்பு பேருந்துகள்!

 

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஜன.20 வரையில் சிறப்பு பேருந்துகள்!

சபரிமலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இம்மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இம்மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இம்மாதம் 17ம் தேதி கார்த்திகை மாதம் துவங்குவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்பதால் பம்பை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகளை சபரிமலை தேவஸ்தானமும், கேரள அரசும் செய்து வருகிறது.

Sabarimala

அதே போல், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளது.

Bus

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், திருச்சியில் இருந்து தினந்தோறும்  2 பேருந்துகளும்,  மதுரையில் இருந்து தினந்தோறும் 2 பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து 2 பேருந்துகளும், தென்காசியில் இருந்து தினசரி 3 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.  இந்த பேருந்துகளில்  www.tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தும் டிக்கெட்டுகளை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.