தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

மிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

கடந்த சில நாட்களாக மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து 26 ஆம் தேதி காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல பகுதிகளில்  இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையின் முக்கிய இடங்களான அண்ணாநகர், சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

ttn

இந்நிலையில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை,தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.