தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் மிகக்கடும் புயலாக மாயிருந்த ஆம்பன் புயல் தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் 6 மணி நேரத்தில் 16கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை மாலை கரையை கடக்கும் என்றும் இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.