தப்பு பண்ணா அடிக்க கூடாது, குணமா வாயில சொல்லி பழகணும்: அம்மாவுக்கு அட்வைஸ் சொன்ன குழந்தை: வைரலாகும் வீடியோ!

 

தப்பு பண்ணா அடிக்க கூடாது, குணமா வாயில சொல்லி பழகணும்: அம்மாவுக்கு அட்வைஸ் சொன்ன குழந்தை: வைரலாகும் வீடியோ!

சென்னை: தப்பு பண்ணா  அடிக்கக் கூடாது, குணமா வாயில சொல்லி பழகணும்னு குழந்தை ஒன்று தன் அம்மாவுக்கு  அறிவுரை சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

குழந்தைகள் துறு துறு என்று எதையாவது செய்து அனைவரையும் கவர முயற்சி செய்வார்கள். அவர்களின் செயலை கண்டு மகிழ்ச்சியடையும் பெற்றோர் அதே குழந்தை சாதாரணமாக செய்யும் செயலைக்கூட அங்கீகரிக்காமல் அடித்துத் துவைத்து விடுகின்றனர். குழந்தைகள் விளையாட்டுத்தனமாகச் செய்வதை ஏற்றுக்கொள்வது பெற்றோரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்த விஷயமாகவே இருக்கிறது.

 

அப்படி ஒரு குழந்தையை அடிக்கும் அம்மாவை, தப்பு பண்ண அடிக்கக் கூடாது, குணமா வாயில சொல்லி பழகணும்னு அந்தக் குழந்தையே அறிவுரை சொல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில்  வேகமாகப் பரவி வருகிறது.