தன் மகனை இரண்டாவது முறையும் சாதித்தான் என கேட்ட தாய்!

தன் மகனை இரண்டாவது முறையும் சாதித்தான் என கேட்ட தாய்!

தேர்தலுக்கு முன்பே தன் தாயைச் சென்று சந்தித்தவர், பெருவெற்றிக்குப் பிறகு அதுவும் பதவியேற்பதற்கு முன்பாக செல்லமாட்டாரா என்ன? தேர்தல் வெற்றிக்குப்பிறகு முதன்முறையாக குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள மோடி, விமான நிலையத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எந்தவொரு நல்ல காரியம் பண்றதுக்கு முன்னாடியும் ஸ்வீட் சாப்பிடுறாரோ இல்லையோ, தன் தாயைப் போய் சந்தித்து ஆசி வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பவர் பிரதமர் மோடி. கூடவே போட்டோகிராபர்களும் போவார்கள் என்ற அரசியல் விமர்சனம், இந்த‌ சென்டிமென்ட் கட்டுரைக்கு பொருந்தாது. ஒவ்வொரு முறை பிரதமர் அவர் தாயை சந்தித்து ஆசி வாங்குகிறபோதும், தாயிடம் ஆசி வாங்கினார் என்றுதானே திரும்பத்திரும்ப செய்தி வருகிறது. ஒரு மாற்றத்துக்கு ஒரு சின்ன கேள்வி. பிரதமர் மோடியின் தாய் பெயர் என்ன? தெரிந்தவர்கள் ஸ்மார்ட் பாய்ஸ். தெரியாதவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

தேர்தலுக்கு முன்பே தன் தாயைச் சென்று சந்தித்தவர், பெருவெற்றிக்குப் பிறகு அதுவும் பதவியேற்பதற்கு முன்பாக செல்லமாட்டாரா என்ன? தேர்தல் வெற்றிக்குப்பிறகு முதன்முறையாக குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள மோடி, விமான நிலையத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Modi Heeraben Modi

அஹமதாபாத்தில் நடந்த பிரமாண்ட வெற்றிக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், வீடு சென்ற பிரதமர் தன் தாயிடம் ஆசி வாங்கினார். தேர்தல் நடந்த 542 தொகுதிகளில் 349 இடங்களில் தன் கூட்டணியை வெற்றிபெறச் செய்த மோடி, வருகிற 30ஆம் தேதி மாலை இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ளார்.

ஹீராபென் மோடி.  மோடியின் தாய் பெயர்.