தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் சிம்பு

 

தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் சிம்பு

நடிகர் சிம்பு தன்னை பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

சென்னை: நடிகர் சிம்பு தன்னை பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு  நடிக்க இருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்ள சிம்பு விரைவில் பேங்காக் செல்ல உள்ளதாகவும். அங்கு சென்று மார்ஷியல் மட்டுமின்றி தன் உடல் எடையும் குறைக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தன் உடல் எடையை பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கவே சிம்பு இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.