தன்னை விட சிறு வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் டிடி: யாரு தெரியுமா அந்த ஹீரோ? 

 

தன்னை விட சிறு வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் டிடி: யாரு தெரியுமா அந்த ஹீரோ? 

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி தன்னை விட 13 வயது சிறிய ஹீரோவுடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துவருவதாக அறிவித்துள்ளார்.

சென்னை: விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி தன்னை விட 13 வயது சிறிய ஹீரோவுடன் இணைந்து புதிய திரைப்படம் நடித்துவருவதாக அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி (டிடி). இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் ஏனென்றால் அவ்வளவு ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார். சமீபத்தில் இவர் டிவி தொகுப்பாளராக 20 ஆண்டுகால பயணத்தை முடித்ததாக அறிவித்தனர்.

dd

தமிழ் சினிமாவில் நளதமயந்தி,விசில்,பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ள டிடி தற்போது தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 

dd

அனில் பதூரி இயக்கி உருவாகி வரும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் டிடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆகாஷ் பூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சார்மி கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை மகிழ்ச்சியுடன் டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிடும் கருணாஸ் பட நாயகி!