தனுஷ் நடிக்கப் போகும் D43 படத்தின் கதை இதுதான்.

 

தனுஷ் நடிக்கப் போகும் D43 படத்தின் கதை இதுதான்.

பட்டாசு படத்தின் போதே சத்திய ஜோதிக்கு இன்னொரு படம் செய்யப்போகிறார் தனுஷ் என்று செய்திகள் வந்தன. நேற்று அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்தியஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்டது.கார்த்திக் நரேன் இயக்கும் அந்தப் படத்திற்கு D43 என்று பெயரிட்டு இருக்கிறார்கள். 

KARTHICK-NARENA

மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தை முடித்த கையோடு தனுஷ் இந்தப் படத்தை துவங்குவார் என்று தெரிகிறது. படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்யப்போவதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்து இருப்பதால், இந்த வருட தீபாவளி ரேஸில் தனுஷும் கலந்து கொள்கிறார் என்பது உறுதியாகிறது.

DHANUSH-78

இயக்குநர் கார்த்திக் நரேன் தனது வழக்கமான கிரைம் திரில்லராகத்தான் இந்த டி43ஐயும் கொடுக்கப் போகிறார். ஆனால்,இந்த முறை படத்தின் திரைக்கதையை எழுத கேரளத்தில் இருந்து இரண்டு இளைய தலைமுறை திரைக்கதை ஆசிரியர்களை அழைத்து வருகிறார். சுகாஸ்,ஷர்ஃபு என்கிற இந்த இருவரும் ஏற்கனவே ‘ வைரஸ்’,’வரதன்’ வெற்றிப் படங்கள் மூலம் தங்களது திறமையை நிரூபித்தவர்கள்.
அப்படி என்ன ஸ்பெஷல் கதை என்றால்,அதெல்லாம் ஒன்றுமில்லை,பலபேர் அடித்து வெளுத்த கதைதான். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். பத்திரிகையாளர் ஒருவரும் அவர் மனைவியும் கொடூரமான முறையில் கொல்லப் படுகிறார்கள்.போலீசால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.இறந்து போன பத்திரிகையாளரின் மகன் தன் பெற்றோரைக் கொன்றவனை எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதுதான் கதை!.ரொம்பப் புதுசா இருக்கில்ல!.