தனுஷை காப்பியடித்த ஷாருக்கான்?

 

தனுஷை காப்பியடித்த ஷாருக்கான்?

பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் சித்திரக்குள்ளனாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தில் தனுஷின் சாயல் இடம்பெற்றிருப்பது கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை: பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் சித்திரக்குள்ளனாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தில் தனுஷின் சாயல் இடம்பெற்றிருப்பது கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜீரோ’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் புதிய புரொமோ ஒன்ரு வெளியாகியுள்ளது. இதுவ்ரை 15 லட்சம் பார்வையாளர்களை கடந்த இந்த வீடியோவில் கோலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதில் ஷாருக்கான் பேசும் வசனம் ஒன்று தமிழ் ஸ்டார் தனுஷ் ‘படிக்காதவன்’ படத்தில் பேசிய பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புரொமோவில் ஷாருக்கான், ‘ஹம் ஜெய்சே லோண்டோ சே தேக்கே பியார் நஹி ஹோத்தா பஹன் ஜி தேக்தே தேக்தே ஹோ ஜாத்தா ஹை’ என வசனம் பேசியுள்ளார். இது ‘படிக்காதவன்’ படத்தில் தமன்னாவிடம் தனுஷ் கூறும், ‘என்ன மாதிரி பசங்களை பார்த்தா புடிக்காது, பார்க்க பார்க்க தான் புடிக்கும்’ என்ற வசனம் ஆகும்.

‘ஜீரோ’ படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் நடிகர் தனுஷின் பெரிய ரசிகர். பாலிவுட்டில் தனுஷ் அறிமுகமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியது ஆனந்த் எல்.ராய் என்பது குறிப்பிடத்தக்கது.