தனுஷை கட்டிப்பிடித்து கொண்டு போஸ் கொடுத்த மஞ்சு வாரியர்: வைரல் போட்டோ!

 

தனுஷை கட்டிப்பிடித்து கொண்டு போஸ் கொடுத்த மஞ்சு வாரியர்: வைரல் போட்டோ!

 இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

asuran

இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

dhanush

இப்படம் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இதையடுத்து அசுரன் படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், மஞ்சுவாரியர் மற்றும் கென் இருவருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.