தனுஷுக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு பட நடிகர்!

 

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு பட நடிகர்!

நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் வில்லனாகத் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிக்கிறார்.

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் வில்லனாகத் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

dhanush

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை ‘கொடி’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாகச் சினேகா நடிக்கிறார். இதில் தனுஷ் தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

naveen chandra

இந்நிலையில் இன்னும் பெயரிடாத இப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாய் பல்லவியுடன் 2வது திருமணம்? முதல் முறையாக வாய் திறந்த விஜய்!