தனுஷுக்கு வந்த சோதனை..! எப்பதான் சார் தீரும்…!? 

தனுஷுக்கு வந்த சோதனை..! எப்பதான் சார் தீரும்…!? 

பாவம் தனுஷ் ரசிகர்கள்..! இந்த வாரம் கண்டிப்பா வந்திரும்னு வாரா வாரம் காத்திருப்பதும் கடைசி நேரத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியாவதில் சிக்கல் என்று யாரோ ஒருத்தர் ட்வீட்டைத் தட்டிவிட,இரண்டு நாளைக்கு அது குறித்து ஆளாளுக்கு சிக்கலுக்கான காரணம் இதுதான் என்று சோஷியல் மீடியாக்களில் எழுதி தள்ளுவதோடு முடிந்து விடும்..திடீரென்று ஒரு நாள் ரிலீஸ் டேட் போட்டு விளமபரம் வரும்…மறுபடியும் முதலிலிருந்தே எல்லாமும் நடக்கும்!? 

enpt

இன்றும் அப்படிதான் நாளை வெளியாவதாக இருந்த தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகாது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.இந்தப் படம் வெளியாகவேண்டிய தியேட்டர்களில் பிச்சைக்காரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ ரிலீஸ் ஆகவிருக்கிறது என்று க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது படக்குழு!

smp

சித்தார்த்,ஜி.வி.பிரகாஷ் இருவரும் நடித்திருக்கும் இந்தப் படம் வெளியாவது குறித்து கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தகவலே இருந்ததில்லை.தனுஷ் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இந்தப் படத்தை ரிலிஸ் பண்ணலாம் என்று யார் முடிவு பண்ணினார்கள் என்று தெரியவில்லை…ஜாக் பாட் அடித்த மாதிரி தியேட்டருக்கு வருகிறது படம்.

பாவம்,தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல…சித்தார்த்,ஜி.வி ரசிகர்களும்தான்,இப்போ அவசர அவசரமா ஃப்ளெக்ஸ் அடிக்கணும்,தியேட்டரில் பேனர் கட்டணும் எவ்வளவு வேலை இருக்கும்…சீக்கிரம் கிளம்புங்க மக்கா..அப்பறம் ஒரு எச்சரிக்கை-பதட்டத்துல கண்ட இடத்தில் போஸ்டரை ஒட்டிரப் போறீங்க,1000 ரூபாய் ஃபைன் போட்டுறப்போறாங்க…பார்த்து பண்ணுங்கப்பா…