தனுஷுக்கு ஜோடியாகும் ‘கும்கி’ நாயகி?

 

தனுஷுக்கு ஜோடியாகும் ‘கும்கி’ நாயகி?

தனுஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் அவருக்கு ஜோடியாக கும்கி’ பட நாயகி லக்ஷ்மி மேனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தனுஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் அவருக்கு ஜோடியாக கும்கி’ பட நாயகி லக்ஷ்மி மேனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான முன்னணி கதாநாயக்ர்களுடன் நடித்த லக்ஷ்மி மேனன், படிப்புக்காக சினிமாவுக்கு சிறிய இடைவெளி கொடுத்திருந்தார்.

தற்போது பிரபுதேவா நடித்து வரும் ‘யங் மங் சங்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமாரின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வடசென்னை படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் தனுஷ், அடுத்தடுத்து திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.