தனுஷிற்கு யுவன் நன்றி

 

தனுஷிற்கு யுவன் நன்றி

ரெளடி பேபி பாடல் ஹிட்டானதால் தனுஷுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை: ரெளடி பேபி பாடல் ஹிட்டானதால் தனுஷுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘மாரி2’ படம் பெரிய அளவில் வசூலை அள்ளியிருக்கிறது. பாடல் மூலமாகவே பெரிய தொகை கிடைத்திருக்கிறது. ரௌடி பேபி பாடலும் அதில் சாய் பல்லவியின் நடனமும் பாடலை யூ டியுபில் மில்லியனின் ரசிகர்களின் எண்ணிக்கையை கொண்டு வந்திருக்கிறது. இதனால்தான் தனுஷ் எப்போதும் தனது படங்களின் பாடல் உரிமையை எந்த கம்பெனிக்கும் விற்கமாட்டார். 

அதற்குப் பதிலாக பாடலை எப்படியெல்லாம் புரோமோஷன் செய்து ரசிகர்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.  இப்போது ரௌடி பேபி பாடல் ஹிட அடித்திருப்பது யுவன் சங்கர் ராஜாவிற்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதனால் யுவன் தனுஷிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்