தனுஷின் அடுத்த 10 படங்கள் லிஸ்ட்! 50 படம் வரை நோ ரெஸ்ட்!

 

தனுஷின் அடுத்த 10 படங்கள் லிஸ்ட்! 50 படம் வரை நோ ரெஸ்ட்!

தனுஷின் 41வது படத்திலிருந்து 50வது படம் வரை பற்றி தகவல் கிடைச்சிருக்குது, தனுஷின் 40வது படம்  ஜகமே தந்திரம் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவருடைய 41வது படத்தை மாரிசெல்வராஜ் இயக்குவதாகவும் அது கர்ணன் என்றும் அல்லாருக்கும் தெரியும்.

இந்நிலையில் தனுஷின் 42வது திரைப்படம் ஹிந்தி திரைப்படம் 43வது படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளது, ஜிவி இசையமைப்பதும் தெரியும், 44வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தனுஷே இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ்

மேலும் தனுஷின் 45வது திரைப்படம் ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார் என்று தகவல் வந்துள்ளது, 46வது திரைப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படம் புதுப்பேட்டை 2ஆக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

தனுஷின் 47வது திரைப்படத்தை குட்டி படத்தை இயக்கிய மித்திரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக கூறப்படுது, 48வது திரைப்படம் பவர் பாண்டி இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் 49 தனுஷ் மனைவி கதை என்றும் அப்படி ஏதுமில்லை என்றும் ஆனா தனுஷின் 50வது திரைப்படம் வடசென்னை 2ஆக இருக்கலாம் என்று  மட்டும் கூறப்படுகிறது.