தனுஷின் அசுரன் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? விவரம் இதோ… 

 

தனுஷின் அசுரன் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? விவரம் இதோ… 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அசுரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘அசுரன்’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அவர்களுடன் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குரு சோமசுந்தரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்.4ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆடுகளம், பொல்லாதவன் திரைப்படங்களைத் தொடர்ந்து  தனுஷ்-வெற்றிமாறன் மீண்டும் இணைந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.