தனுசு ராசி நேயர்களே… இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக தொடங்குகிறது!

 

தனுசு ராசி நேயர்களே… இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக தொடங்குகிறது!

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பியார் பிரேமா காதல்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுசு ராசி நேரயர்களே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குநருமான சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார். 

harish

ஆட்டோ மொபைல் வேலை பார்க்கும் இளைஞனாக நடிக்கும் ஹரிஷ் ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராக நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படம் காதல் திரைப்படம் இல்லை என்றும், ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 

இசைமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், ரேணுகா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்தின் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கவன ஈர்ப்பை பெறும் ஹாரர் காமெடி படங்கள்; மே மாதம் வெளியாகிறது ஜாம்பி