தனி மனித இடைவெளியுடன் பொதுமக்களை கைது செய்ய புதிய கருவியை கண்டுபிடித்த காவல்துறை!!

 

தனி மனித இடைவெளியுடன் பொதுமக்களை கைது செய்ய புதிய கருவியை கண்டுபிடித்த காவல்துறை!!

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த 25ம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்பதற்காகத்தான் இந்த ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரசின் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் வீட்டை வெளியே வந்து சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த சம்பவம் எல்லா மாநிலங்களில் நடக்கத்தான் செய்கிறது. 

 

 

இந்நிலையில்  ஊரடங்கை மீறுபவர்களை தனிமனித இடைவெளியுடன் பிடிக்க சண்டிகர் காவல்துறையின் விஐபி பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.  ஐந்து அடி நீளமுள்ள உலோகக் கம்பியைக் கொண்ட ஒரு கருவியை போலீசார் உருவாக்கியுள்ளனர், அவை ஒரு முனையில் இடுக்கி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. சாதனத்தின் மறுமுனையை காவலரின் கைகளில் கட்டிக்கொள்ளலாம், பின்னர் அதை ஒரு நெகிழ்வான கம்பி மூலம் இயக்குகின்றனர். விதியை மீறுபவர்களை பிடிக்க ஒரு பொறி போன்ற அமைப்பில் உள்ளது. இதனால் குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது.