‘தனி நபர் செய்த பேரழிவு’ – பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சாடிய ஸ்டாலின்

 

‘தனி நபர் செய்த பேரழிவு’ – பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சாடிய ஸ்டாலின்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தனி நபர் செய்த பேரழிவு என திமுக தலைவர் ஸ்டாலின் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தனி நபர் செய்த பேரழிவு என திமுக தலைவர் ஸ்டாலின் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் 99.3 சதவிகித நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாகவும் ஆர்பிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அதை தற்போது நினைவு கூர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “மக்களின் பணம் செல்லாது என்று கூறி அவர்களை தெருவிற்கு கொண்டு வந்தார்கள். முடிவில்லாத வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள், பல இந்தியர்கள் வங்கிக்கு வெளியே உயிரிழந்தார்கள், பலர் வேலையை இழந்தனர், பல சிறு நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்திய பொருளாதாரம் பின்னோக்கி சென்றது.. இந்த நடவடிக்கை தனி ஒரு மனிதர் செய்த பேரழிவு” என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.