தனியார் வங்கிகளில் இருக்கும் டெபாசிட் தொகைகளைத் திரும்பப் பெற வேண்டாம் : ரிசர்வ் வங்கி வேண்டுகோள்!

 

தனியார் வங்கிகளில் இருக்கும் டெபாசிட் தொகைகளைத் திரும்பப் பெற வேண்டாம் : ரிசர்வ் வங்கி வேண்டுகோள்!

மும்பையைச் சேர்ந்த தனியார் வங்கியான யெஸ் வங்கி, கடன் சுமை காரணமாக மூடப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது.

மும்பையைச் சேர்ந்த தனியார் வங்கியான யெஸ் வங்கி, கடன் சுமை காரணமாக மூடப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது. அதனால் அதில் டெபாசிட் செய்துள்ள தொகையை எடுக்க அனைத்து நிறுவனங்களும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதே போல, அனைத்து தனியார் வங்கிகளிலும் டெபாசிட் செய்த தொகையை திரும்பப்பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தனியார் வங்கிகளில் உள்ள டெபாசிட் தொகையைத் திரும்ப எடுக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ttn

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைத் திரும்பப் பெற வேண்டாம் என்றும் அப்படிச் செய்தால் வங்கி மற்றும் நிதிசார் துறைகளைப் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தனியார் வங்கிகளில் இருக்கும் தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்ற மாநில அரசு முடிவு எடுத்திருந்தால், அதனைப் பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தனியார் வங்கிகளின் இந்த நிலையை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.