தனியார் மயமாகும் சத்துணவுத்திட்டம்? இனிதே தொடங்கிவைத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்!!

தனியார் மயமாகும் சத்துணவுத்திட்டம்? இனிதே தொடங்கிவைத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு திட்டத்தை தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கையில் கொடுத்துள்ளது தமிழக அரசு. இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

சுமார் 16 ஆயிரம் அரசு மற்றும் அரசு சாராப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்திவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அட்சய பாத்திரம். இந்த தொண்டுநிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் உணவுகளால் ஏராளமான குழந்தைகள் பயன்படுறுகின்றனர். 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக பல்வேறு சமூக ஆர்வலர்கள் மக்களிடமிருந்து நிதி திரட்டி அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் உணவுகள் முற்றிலும் சைவம். அதாவது உணவில் வெங்காயம், பூண்டு கூட சேர்க்கப்படாதாம்.

அட்சய பாத்திரம்

தமிழகத்திலும் அட்சய பாத்திரம் அறக்கட்டளை பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளித்து வருகிறது. அட்சய பாத்திர அமைப்பும், சென்னை மாநகராட்சியும் இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், அட்சய பாத்திரம் அறக்கட்டளை அமைப்பின் உணவுக் கூடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழக அரசு சார்பில் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில் தனியார் உணவு நிறுவனத்திடம் ஒப்படைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.