தனியார் பால் மற்றும் தயிர் விலை அதிகரிப்பு.. அதிருப்தியில் மக்கள் !

 

தனியார் பால் மற்றும் தயிர் விலை அதிகரிப்பு.. அதிருப்தியில் மக்கள் !

கடந்த ஆண்டே தனியார் பால் பாக்கெட்டுகளின் விலை மூன்று முறை உயர்ந்தது. இந்நிலையில், மீண்டும் தனியார் பால் விலை உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகக் காய்கறிகள் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஏற்றத்தைச் சந்தித்தது. குறிப்பாக வெங்காயம், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் என அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. இது ஏழை, எளிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பால் முக்கியமான ஒன்று. கடந்த ஆண்டே தனியார் பால் பாக்கெட்டுகளின் விலை மூன்று முறை உயர்ந்தது. இந்நிலையில், மீண்டும் தனியார் பால் விலை உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ttn

அதாவது, ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் 20 ஆம் தேதி( நேற்று) முதல் லிட்டருக்கு ரூ.4 முதல் 6 வரைபால், தயிர் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயருவதால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது விற்கப்படும் விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆவின் பாலை விட, தனியார் பால் பாக்கெட்டுகள் ரூ.5 முதல் 15 வரை கூடுதலாகவே விற்கப்படுகின்றன. 

ttn

மேலும், ரூ.48க்கு விற்கப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட பால் ரூ.50க்கும், ரூ.52க்கு விற்கப்பட்டு வந்த நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.56க்கும், ரூ.60க்கு விற்கப்பட்டு வந்த செறிவூட்டப்பட்ட பால் ரூ.62க்கும் விலை உயர்த்தப்பட்டு இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.