தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குனர்

 

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குனர்இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்பதால் தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது என்றும், மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளது.