தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் அறிவிப்பு! ஒன்றாம் வகுப்புக்கு இவ்வளவா?

தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் அறிவிப்பு! ஒன்றாம் வகுப்புக்கு இவ்வளவா?

தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 

தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் குழந்தைகளுக்கான கல்விக்கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளிலுள்ள 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்விக்கட்டணம் மத்திய, மாநில அரசுகளே செலுத்திவிடும். அந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசு தற்போது அறிவித்துள்ளது.

private school

அதன்படி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி மற்றும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.11,946 -ஆகவும்,  2-ம் வகுப்பிற்கு ரூ.11,895, 3-ம் வகுப்பிற்கு ரூ.12,039, 4-ம் வகுப்பிற்கு ரூ.12,033 ஆக தனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் கல்வியாண்டில், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 385 பேர் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.