தனிமையை நேசிப்பவரா நீங்கள்? அப்போ இத படிங்க..!

 

தனிமையை நேசிப்பவரா நீங்கள்? அப்போ இத படிங்க..!

தனிமை ஒருவரின் சோகத்தையும், இழப்பையும் வெளிக்காட்டும் விதம் என்ற பேச்சு நிலவுகிறது.

தனிமை ஒருவரின் சோகத்தையும், இழப்பையும் வெளிக்காட்டும் விதம் என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால், தனிமை என்பது அனைவரது வாழ்விலும் ஒரு தருணத்தில் தனது சுயரூபத்தை காட்டும். தனிமையில் இருப்பவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்தபடி வாழலாம்.

தனிமையை இரண்டு விதமாக பார்க்கலாம். நமக்கு நாமே சந்தோஷமாக இருந்து தனிமையை ரசிப்பது. சோகமாக இருந்து தனிமையில் வாடுவது. இதில் இரண்டாவது ரகம் மிகவும் கொடியது, இந்த தனிமைப்படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

loneliness

தனிமையில் இருப்பவர்கள் நிறைய யோசிப்பர். அந்த யோசனைகள் யாவும், தனிமை என்ற உணர்வைத் தாண்டி, பல விதமான கோணங்களில் இருக்கும். பொதுவாகவே, தனிமையானது மனதிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளியில் கொண்டுவரும் வல்லமை கொண்டது.

தனிமை ஒருவரை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும் அபாயம் உண்டு. அது அவர்களின் கோபத்தை தூண்டி, வருத்தத்தை அதிகரித்து எதிர்மறை எண்ணங்களை தந்துவிடும் வல்லமை உடையதுதான் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

lonely

தனிமையில் ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதும் மறுப்பதற்கு இல்லை. தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்க வேண்டியதில்லை. அதுவும் ஒரு வாழ்விய்ல முறைதான் என்கிறார்கள் அறிஞர்கள்