தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…..ஏமாற்றம் கொடுத்த மத்திய பட்ஜெட்…

 

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…..ஏமாற்றம் கொடுத்த மத்திய பட்ஜெட்…

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. இது நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இன்று தாக்கல் செய்யப்படும் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என கடந்த சில தினங்களாக பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தினால் மக்களின் வாங்கும் சக்தியை அது உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிர்மலா சீதாராமன்

ஆனால் மத்திய பட்ஜெட் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. தற்போது ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விதிப்பு கிடையாது. ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது.