தனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்!

 

தனிநபருக்கான அந்தரத்தில் பறக்கும் ட்ரோன்!

நம்ம ஊர்ல ஆட்டோக்கள்கூடதான் பறக்கும், என்னவோ வானத்துலயே பறந்தமாதிரி பீலா விடாதீங்க என்றால், அட நிஜமாதாங்க, வானத்தில் பறந்தபடிதான் அந்த வீரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வாகனத்திற்குப் பெயரே Flyboardதான்.

ஒரு நாட்டோட சுதந்திர தினம் இல்ல முக்கியமான நாளன்னைக்கி வழக்கமா என்ன பண்ணுவாங்க? ராணுவ அணிவகுப்பு நடக்கும், போர் விமானங்கள் வண்ணப்பொடிகளைத் தூவியபடி பறக்கும், ராணுவ டாங்கிகளின் கம்பீர நடைபயணம் என அதகளப்படும் இல்லையா? இதெல்லாம் போரடிக்குது என நினைத்த பிரான்ஸ் அரசு, அதன் தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் பாரீஸில் நடத்திய விழாவில் புதுமையாக ஒன்றை செய்துள்ளது. வாகனத்தில் பறந்தபடி ராணுவ உடையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஒருவரை காட்டி வாயை பிளக்க வைத்தது.

Flyboard

நம்ம ஊர்ல ஆட்டோக்கள்கூடதான் பறக்கும், என்னவோ வானத்துலயே பறந்தமாதிரி பீலா விடாதீங்க என்றால், அட நிஜமாதாங்க, வானத்தில் பறந்தபடிதான் அந்த வீரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வாகனத்திற்குப் பெயரே Flyboardதான். ஃபிராங்கி ஸபாட்டா என்பவர் இந்த பறக்கும் எந்திரத்தை கண்டுபிடித்ததுடன், பொதுமக்கள் மத்தியில் அதன்மீது ஏறி பறந்தும் காட்டியுள்ளார். இதைப் பார்த்த உடனே நம்ம ஊர்ல மூன்று விதமான ரியாக்சன்களுக்கு வாய்ப்பு உண்டு. 1. புராண காலத்தில் மனிதர்கள் பறந்திருக்கிறார்கள். அனுமன்கூட இலங்கைக்கு பறந்துதான் சென்றார். 2. குறிப்பிட்ட யோகா செய்தால், எந்த எந்திரத்தின் உதவியும் இன்றி வானத்தில் யார் வேண்டுமானாலும் பறக்கலாம். 3. அனில் அம்பானிக்கு அடுத்த கான்ட்ராக்ட் கன்ஃபர்ம்ட்.