‘தனிச் சிறையிலிருந்து என்னை விடுவியுங்கள்’ : மீண்டும் போராட்டம் நடத்தும் முருகன்!

 

‘தனிச் சிறையிலிருந்து என்னை விடுவியுங்கள்’ : மீண்டும் போராட்டம் நடத்தும் முருகன்!

முருகன் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு பிரிவு 3-ல் இருந்த முருகனின் அறையில் திடீரென காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அவரின் அறையில் இருந்து செல்போன், சிம் கார்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அதனால், முருகன் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். அது மட்டுமின்றி, மத்தியச் சிறையில் முருகனுக்கு வழங்கப் பட்டு வந்த சலுகைகளான நளினி- முருகன் சந்திப்பு, பார்வையாளர்கள் சந்திப்பு போன்றவற்றை ரத்து செய்யப்பட்டது. 

Nalini murugan

அதனைத் தொடர்ந்து, நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கும் எங்களை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். முருகன் 21 நாட்களாகவும் நளினி 17 நாட்களாகவும் உண்ணாவிரதம் இருந்தனர்.

Murugan

அதனையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் நளினியும் முருகனும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்நிலையில், தனிச் சிறையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று முருகன் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.