தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா

 

தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா

கமல், சூர்யா, தனுஷ் என பலருடனும் இணைந்து நடித்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை சினேகா. தமிழ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் என பலருடனும் இணைந்து நடித்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து சினேகா மீண்டும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் கர்ப்பமானார். 

 

ஏற்கனவே  சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த ஜோடிக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆத்யந்தா என்ற பெயர் வைத்துள்ளனர். 

ttn

இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு  நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தனது அக்கா மற்றும் அம்மாவின் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.