தனது தம்பியின் புகைப்படத்தை திடீரென வெளியிட்ட அறந்தாங்கி நிஷா

 

தனது தம்பியின் புகைப்படத்தை திடீரென வெளியிட்ட அறந்தாங்கி நிஷா

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

 

இவருக்கு ரியாஸ் என்ற கணவரும் ஒரு மகனும்  இருக்கும் நிலையில் நிஷாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் குழந்தையின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.  

ttn

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தம்பியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், என்னோட செல்லத்தம்பி இவன் தான் உங்க கிட்ட காட்டணும்னு தோணிச்சு என்று பதிவிட்டுள்ளார்.

ttn

அதே போல் அறந்தாங்கி நிஷா தனக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஆங்கிலம் எடுத்த ஆசிரியரையும் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.