” தனது சம்பளத்திலிருந்து மாத மாதம் 30% தொகையை பிடித்தம் செய்துகொள்ளுங்கள்” தமிழிசை வேண்டுகோள்!

 

” தனது சம்பளத்திலிருந்து மாத மாதம் 30% தொகையை பிடித்தம் செய்துகொள்ளுங்கள்” தமிழிசை வேண்டுகோள்!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள்  நிதி திரட்டி வருகிறது. இதனால் அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் கோடிக்கணக்கில் கொரோனா நிதியாக வழங்கி வருகிறார்கள்.  

இந்தியாவிலும் கொரோனா வேகம் காட்டி வருகிறது. இதனால் மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 4,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 111 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ttn

அதே சமயம் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள்  நிதி திரட்டி வருகிறது. இதனால் அரசியல் பிரமுகர்களும், நடிகர்களும் கோடிக்கணக்கில் கொரோனா நிதியாக வழங்கி வருகிறார்கள்.  

ttn

இந்நிலையில் தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கொரோனா நிவாரண நிதி வழங்க முன்வந்துள்ளார்.

ttb

இது குறித்து அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  ” இந்தியாவில் நிதி நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை எனது சம்பள தொகையிலிருந்து  மாத மாதம் 30% பிடித்தம் செய்து கொள்ளுங்கள். அதன்படி மாதத்திற்கு 1 லட்சத்து  5,000 ரூபாய்  தொகை கிடைக்கும். இது  பிரதமரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும்” என்று வலியுத்தியுள்ளார்.