தந்தை வாங்கிய கடனுக்காக குழந்தையை கண்ணை தோண்டி, ஆசிட் ஊற்றி கொன்ற வெறிச்செயல்: வலுக்கும் போராட்டம்!?

 

தந்தை வாங்கிய  கடனுக்காக குழந்தையை கண்ணை தோண்டி, ஆசிட் ஊற்றி கொன்ற வெறிச்செயல்:  வலுக்கும் போராட்டம்!?

தந்தை வாங்கிய கடனுக்காக 2 வயது குழந்தை கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் : தந்தை வாங்கிய கடனுக்காக 3 வயது குழந்தை கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று திரையுலகை சேர்ந்தவர்கள்  பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

உத்தரப்பிரதேசம் அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா. இவரது மூன்று  வயது மகள்  டிவிங்கிள் கடந்த மே 31ஆம் தேதி காணாமல் போயுள்ளார். இதனால்  குழந்தையைத்  தேடிய  பன்வாரிலால்,  போலீசில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த  போலீசார்,  குழந்தையைத் தீவிரமாகத் தேடியுள்ளனர். அப்போது குழந்தை டிவிங்கிள் அங்குள்ள குப்பைமேட்டில்  கிடப்பதாகப்  போலீஸுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற  போலீஸார்  குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

baby

இதைத் தொடர்ந்து குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தை  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும்,  சுயநினைவை இழந்த குழந்தையின் கையை வெட்டி, கண்ணைத் தோண்டி எடுத்து இறுதியாக அடையாளம் தெரியாமல் இருக்க உடலில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்ததும்  தெரியவந்துள்ளது. 

murder

இந்த கொடூர கொலை குறித்து விசாரணை நடத்திய போலீஸாரிடம் , குழந்தையின் தந்தை பன்வாரிலால் சர்மா, தான் ஸாகித் என்பவரிடம் வாங்கிய 10000 ரூபாய் கடனால் நீண்ட நாளாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்தாகவும், அதனால் அவர் மீது  தனக்குச் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஸாகித் மற்றும் அவரின் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

alikag

 

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை வழங்க வேண்டும் என்று #justicefortwinkle  என்ற ஹேஷ்டாக் மூலம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

 

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகை ட்விங்கிள் கண்ணா, இந்த கொடூர  கொலை செய்தியை அறிந்து இதயம் உடைந்து போய்  விட்டது. இந்த கொடூரமான குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக அமைச்சர் ஸ்மிரிதி இரானி  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். 

 

நடிகர் அபிஷேக் பச்சன் தனது  டிவிட்டர் பக்கத்தில், இதை பார்க்கும் போது  வெறுப்பாகவும் கோபமாகவும் இருக்கிறது. எப்படி இது போன்ற காரியங்களை செய்யமுடிகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதே போல் நடிகர் அர்ஜுன் கபூர்,  காட்டுமிராண்டித்தனமாக கற்பழிப்பு மற்றும் இந்த கொலை சம்பவம் மனித இனத்திற்கே அவமானம். நீதி வழங்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். 

இப்படி நடிகை சன்னிலியோன், சித்தார்த் மல்ஹோத்ரா, ஆயுஷ்மான் குர்ரானா, நடிகை ரவீனா உள்ளிட்ட பலரும் இந்த குற்ற சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.