‘தந்தை பாரத்தைக் குறைக்க மகன் கண்டுபிடித்த இயந்திரம்’.. தேநீர் விருந்துக்கு அழைத்த ஜனாதிபதி!

 

‘தந்தை பாரத்தைக் குறைக்க மகன் கண்டுபிடித்த இயந்திரம்’.. தேநீர் விருந்துக்கு அழைத்த ஜனாதிபதி!

இந்த இயந்திரம் “INSPIRE Awards –MANAK” விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 இயந்திரத்தில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் மதுப்புரா பகுதியைச் சேர்ந்தவர் சுசாந்த குமார். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இவருக்கு பிப்லப் குமார்(12) என்னும் மகன் இருக்கிறார். பிப்லப் மதுப்புராவில் உள்ள உபேந்திர நாத் நோடல் மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது இளம் வயதிலேயே தன் தந்தை வெயிலிலும் மழையிலும் நிலத்தில் கஷ்டப்படுவதை அறிந்த பிப்லப் குமார், அவரின் பளுவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இயந்திரம் ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

ttn

அதன் படி தன் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ரூ .10,000 செலவில் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது குறித்துப் பேசிய  பிப்லப் குமார்,  “விதை விதைப்பதற்கு முன் நிலம் தயாரித்தல், உழுதல், நீர் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல், விதைகளை விதைத்தல் உள்ளிட்ட 6 வெவ்வேறு பணிகளை ஒரே நேரத்தில் அந்த இயந்திரத்தால் செய்ய இயலும்” என்றும் இதனை என் தந்தையின் பாரத்தைக் குறைக்கவே இதனைக் கண்டு பிடித்தேன் என்றும் தெரிவித்துள்ளார். 

ttnm

இந்த இயந்திரத்தை மாநில மற்றும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி இந்த சிறுவன் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த இயந்திரம் “INSPIRE Awards –MANAK” விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 இயந்திரத்தில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறுவன்  பிப்லப் உருவாக்கிய இந்த இயந்திரம் ஆசிரியர்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதனால் ஜனாதிபதி அந்த சிறுவனைத் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். நிகழ்வின் சரியான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சிறுவனுக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.