‘தந்தையுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும்’..சிறையில் இருக்கும் முருகன் அவசர மனு!

 

‘தந்தையுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும்’..சிறையில் இருக்கும் முருகன் அவசர மனு!

தங்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் 7 பேரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர், ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு 28 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இப்போது வரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இருப்பினும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் 7 பேரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ttn

இதனிடையே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டதால், பொதுமக்கள் சிறைக்கைதிகளை சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், புதிதாக வரும் கைதிகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அவர்களை தனிச்சிறையில் போட்டு வருகின்றனர். மேலும், சிறைக்கைதிகள் அவர்களது உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால், அவருடன் வீடியோ காலில் பேச அனுமதி தர வேண்டும் என்று முருகன் முதல்வருக்கு அவசர மனு விடுத்துள்ளார்.